அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் பல்கலையில் "நன்றி நவிலும் நாள் விழா"

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் பல்கலையில் உள்ள திருச்சிற்றம்பலக் கலையரங்கில் "நன்றி நவிலும் நாள் விழா" நடைபெற்றது. இதில், போசிரியல் பார்வதி வரவேற்புரையாற்றினார்.

இதனைத்தொடர்ந்து, அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் பல்கலை உயர்கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் பிரேமாவதி விஜயன் 2016-17 ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்தும், சாதனைகள் குறித்தும் ஆய்வறிக்கையினை வாசித்தார். 

தொடர்ந்து, வேந்தர் ப.ரா.கிருஷ்ணகுமார் தலைமையுரை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், பெண்கள் கல்வி முன்னேற்றத்திற்காக அவினாசிலிங்கம் பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. மாணவியர்கள் தங்களது படிப்பு மற்றும் திறமைகளை வெளிக்கொணர காரணமாக இருக்கிற ஆசிரியர்களின் சேவையை உணர்ந்து செயலாற்ற வேண்டும்' என கூறினார்.

இதையடுத்து, இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி தலைவர் மருத்துவர் எஸ்.ராமலிங்கம் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், இப்பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு விருந்தினராக வருகைபுரிந்ததற்கு தான் பெருமை அடைகிறேன். அன்பும் மரியாதையுடன் கலந்த ஒரு கல்வியை கற்பித்து கொண்டிருக்கிற ஒரு கல்வி நிறுவனமாக அவினாசிலிங்கம் பல்கலைக் கழகம் திகழ்கிறது. மாணவர்கள் தங்களுக்குள் இருக்கும் திறமையை அறிந்து கொண்டு கல்விகற்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் மனம் தளராமல் செயல்பட வேண்டும். தங்களுக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக் கொண்டால் அதன் பயன் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வரும். 

பல்வேறு அறிஞர்கள் எழுதிய புத்தகங்களை படிக்கும் பழக்கம் வளர வேண்டும். தங்களால் முடிந்த  வரை மக்களுக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

இதனைத்தொடர்ந்து, இளங்களை மற்றும் முதுகலை பயிலும் மாணவியர்கள், தொழில்நுட்பக் கல்வி, ஆசிரியர் பயிற்சிக் கல்வி, உடற்பயிற்சிக் கல்வித் துறையிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற 250 மாணவியர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் நிறைவாக விலங்கியல் துறை பேராசிரியர் கே.எஸ்.சாந்தி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...